Sunday, 8 June 2014

கண்ணீர் மட்டுமல்ல..
கவிதையும் கொட்டுகிறது..
அழ நினைக்கும் 
நேரங்களில்...!
பனிக்குடமுடைத்து பிறக்கும் மழலையாம் நீருற்று!...
பிறந்ததும் தவழும் சிசு தானாம் அந்த நீரோடை!...
தவழும் சிறுமி ஆங்கே முடிவு கண்டாள், முகடில் வழுக்கி தன்னை மாய்த்தவள்,
அழகாய் சிரிக்கிறாள் வெண்ணிறாடை அருவிகளாய்!...
விழுந்தவள் உயிர் மாயாது, உடல் மாற்றி தொடர்கிறாள் பசுமைத் தோழி நதிகளாய்!...
தத்தி நடந்து, தாவியோடிப் பாறை உருட்டி உயிர் கொடுக்கிறாள், வயல்களில் ஓடையாய்!...
ஆர்ப்பரித்து களித்தவள் வெட்டிய வாய்கால் வழி குளங்களில் தங்கினாள் குடி/பாசன நீராய்!...
எல்லை மீறிய ஆக்கிரமிப்பால், தொல்லை தாங்காது தடைகளை உடைத்துக் கரைகளைக் கடந்தாள் காட்டாற்று வெள்ளமாய்!...
முடிவிலாப் பயணமோ, முடிவடையத் திண்ணமோ, கன்று தேடும் பசுவாய், அன்னை தேடும் சிசுவாய், இதோ கண்டெடுத்தாள் தனக்கான தாய் மடியாம் கடலன்னை!...
நீருக்கு மட்டுமே சாத்தியமாம் பிறந்த இடத்தில் மடிவது!...
நாக்கு தேள் கொடுக்காக மாறிய பின்
உறவுக்கு உத்திரவாதம் தர யாராலும் இயலாது.
ரோஜாவின் காம்பிலும் முள்!
பெண்ணின் மனதிலும் முள் !!
முள்ளே இல்லாமல் இருக்க!
என்ன செய்வதோ கண்ணே!
இரவு பகலறியாது,
உறவு பகை புரியாது,
அலை பேசியில்
கனிமொழி கதைத்தோம்..
அலப்பெருங் கதைகள்
ஆனந்தமாய் பகிர்ந்தோம்..
மனதிற்குள் கண்ட
மணநாளும் நெருங்கிடவே
ஈருடல் ஒர் மனம் பெற்றோம்..
கதைகள் யாவும்
காலங்கள் மாற்றியது..
பேசிச் சிரித்த நாட்களைவிட
பேசாத மௌனங்களே நீடிக்க...
மொழியின்றி மௌனித்த அந்நாளும் கடந்திடுமோ..
பினியின்றிப் பாவித்த,
பொன்நாளும் தந்திடுமோ...
சர்கரையில் சருக்கிய
பலாச்சுலை போல
இனித்திடும் நன்நாளும் வாய்திடுமோ...
கனிந்த முக்கனியாய் நானும்,
கொறிக்கும் அனிலாய் நீயும்,
இதழ் சுவைத்து மகிழ்ந்திடும்
அந்நாளே இருவரின் பொன்நாளன்றோ...
சிசுக்கள் இளமை எய்தினாலும்..
பசுக்கள் இயற்கை எய்தும் வரை..
தம் கன்றுகள் என்றும்
கன்றுகளே...
பிடித்து இருந்தாலும்
ரசிப்பதே இல்லை
மழையில் நனைவதை. 
சிறு குழந்தைகளும் 
வயதினால் தொலைந்த
குழந்தைகளும்....