பனிக்குடமுடைத்து பிறக்கும் மழலையாம் நீருற்று!...
பிறந்ததும் தவழும் சிசு தானாம் அந்த நீரோடை!...
தவழும் சிறுமி ஆங்கே முடிவு கண்டாள், முகடில் வழுக்கி தன்னை மாய்த்தவள்,
அழகாய் சிரிக்கிறாள் வெண்ணிறாடை அருவிகளாய்!...
அழகாய் சிரிக்கிறாள் வெண்ணிறாடை அருவிகளாய்!...
விழுந்தவள் உயிர் மாயாது, உடல் மாற்றி தொடர்கிறாள் பசுமைத் தோழி நதிகளாய்!...
தத்தி நடந்து, தாவியோடிப் பாறை உருட்டி உயிர் கொடுக்கிறாள், வயல்களில் ஓடையாய்!...
ஆர்ப்பரித்து களித்தவள் வெட்டிய வாய்கால் வழி குளங்களில் தங்கினாள் குடி/பாசன நீராய்!...
எல்லை மீறிய ஆக்கிரமிப்பால், தொல்லை தாங்காது தடைகளை உடைத்துக் கரைகளைக் கடந்தாள் காட்டாற்று வெள்ளமாய்!...
முடிவிலாப் பயணமோ, முடிவடையத் திண்ணமோ, கன்று தேடும் பசுவாய், அன்னை தேடும் சிசுவாய், இதோ கண்டெடுத்தாள் தனக்கான தாய் மடியாம் கடலன்னை!...
நீருக்கு மட்டுமே சாத்தியமாம் பிறந்த இடத்தில் மடிவது!...
No comments:
Post a Comment