Sunday, 8 June 2014

கண்ணீர் மட்டுமல்ல..
கவிதையும் கொட்டுகிறது..
அழ நினைக்கும் 
நேரங்களில்...!
பனிக்குடமுடைத்து பிறக்கும் மழலையாம் நீருற்று!...
பிறந்ததும் தவழும் சிசு தானாம் அந்த நீரோடை!...
தவழும் சிறுமி ஆங்கே முடிவு கண்டாள், முகடில் வழுக்கி தன்னை மாய்த்தவள்,
அழகாய் சிரிக்கிறாள் வெண்ணிறாடை அருவிகளாய்!...
விழுந்தவள் உயிர் மாயாது, உடல் மாற்றி தொடர்கிறாள் பசுமைத் தோழி நதிகளாய்!...
தத்தி நடந்து, தாவியோடிப் பாறை உருட்டி உயிர் கொடுக்கிறாள், வயல்களில் ஓடையாய்!...
ஆர்ப்பரித்து களித்தவள் வெட்டிய வாய்கால் வழி குளங்களில் தங்கினாள் குடி/பாசன நீராய்!...
எல்லை மீறிய ஆக்கிரமிப்பால், தொல்லை தாங்காது தடைகளை உடைத்துக் கரைகளைக் கடந்தாள் காட்டாற்று வெள்ளமாய்!...
முடிவிலாப் பயணமோ, முடிவடையத் திண்ணமோ, கன்று தேடும் பசுவாய், அன்னை தேடும் சிசுவாய், இதோ கண்டெடுத்தாள் தனக்கான தாய் மடியாம் கடலன்னை!...
நீருக்கு மட்டுமே சாத்தியமாம் பிறந்த இடத்தில் மடிவது!...
நாக்கு தேள் கொடுக்காக மாறிய பின்
உறவுக்கு உத்திரவாதம் தர யாராலும் இயலாது.
ரோஜாவின் காம்பிலும் முள்!
பெண்ணின் மனதிலும் முள் !!
முள்ளே இல்லாமல் இருக்க!
என்ன செய்வதோ கண்ணே!
இரவு பகலறியாது,
உறவு பகை புரியாது,
அலை பேசியில்
கனிமொழி கதைத்தோம்..
அலப்பெருங் கதைகள்
ஆனந்தமாய் பகிர்ந்தோம்..
மனதிற்குள் கண்ட
மணநாளும் நெருங்கிடவே
ஈருடல் ஒர் மனம் பெற்றோம்..
கதைகள் யாவும்
காலங்கள் மாற்றியது..
பேசிச் சிரித்த நாட்களைவிட
பேசாத மௌனங்களே நீடிக்க...
மொழியின்றி மௌனித்த அந்நாளும் கடந்திடுமோ..
பினியின்றிப் பாவித்த,
பொன்நாளும் தந்திடுமோ...
சர்கரையில் சருக்கிய
பலாச்சுலை போல
இனித்திடும் நன்நாளும் வாய்திடுமோ...
கனிந்த முக்கனியாய் நானும்,
கொறிக்கும் அனிலாய் நீயும்,
இதழ் சுவைத்து மகிழ்ந்திடும்
அந்நாளே இருவரின் பொன்நாளன்றோ...
சிசுக்கள் இளமை எய்தினாலும்..
பசுக்கள் இயற்கை எய்தும் வரை..
தம் கன்றுகள் என்றும்
கன்றுகளே...
பிடித்து இருந்தாலும்
ரசிப்பதே இல்லை
மழையில் நனைவதை. 
சிறு குழந்தைகளும் 
வயதினால் தொலைந்த
குழந்தைகளும்.... 
விருப்பங்கள் திசை மாறுகின்றன
அன்பின் வசமாகின்றன
எனக்கான விருப்பங்கள் 
என்னிடம் விடை பெறுகின்றன
விடைப்பிரிய மனமில்லாமல் ..
உனக்கான விருப்பங்கள்
இடம் பெயர்கின்றன
விலைமதிக்க முடியா அன்பினால்
என்வசம்...
அவரவருக்கு ஒரு வட்டம் 
வட்டத்தின் விளிம்பில் 
எண்ணத்தின் சிதறல்
சிதறல்களில் சிந்தும் நட்பு புன்னகை...
மணிக் கணக்கில் 
பேசுகிறேன் நான் 
உன் மௌனமே பதிலா
நீ என்னை மதிக்கிறாயா
அவமதிக்கிறாயா
அல்லது நேசிக்கிறாயா
''அன்பே''
இது வரமா சாபமா
உன் அன்பில்
இதையும் நேசிக்கிறேன்...
வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம் 
தோய்ந்த செந்தமிழ்க் கவி வரியா!
ஆய்ந்து பார்ப்பதுண்டா!
காய்ந்துவிடக் கூடாது கவித்துவம்!
சிந்தனை எதுவாயினும் தேவை கவனம் பணத்தில் ........
அடுத்தவரை பாதிக்கா வண்ணம் வண்டியின் ஒலியோ ,விளக்கோ ...........
இணையான கவிதை இல்லை ஆட்டோ வாசகத்திற்கு ..........
பூமியை மாற்று மழை நீர் சேமிப்பாக ........
விமான பணி பெண்ணும் ஆடம்பரமாய் , விமானம் போல .........
அழகு மறைத்தும் அறிவு போற்றும் கவிதை ரசனை வாழ்க ..........
படிக்கும் போது பிடிக்கா கல்வி , பிடிக்குது படித்து முடித்த பின் .........
நாகரீகமோ , பழமையோ விளிம்பில் சில மக்கள் . ........
மதிப்பை கொடுத்து அன்பை பெறு ..........
பலரை கொல்லும் உன் மது ......bus ஓட்டுனர் .........
அடிவரை இறங்கும் ஆணி வேறாய் ஆணவம் ............
பட்டம் பறக்க விடு பட்டம் வாங்காமலே ........kite........
ஒற்றுமையில் காகமாய் ஏழைகள் ...........
பணத்தால் வாங்க முடியா ஏழை மகழ்ச்சி . ........
நெற்றியில் விபூதி , நெஞ்சத்தில் பெண் .......சில சாமியார் ........
துக்கத்திற்கு கருப்பு எனின் மக்ழ்சிக்கு ..........
பெண் துரத்துவது விடுத்து அவள் அறிவை துரத்து ........
பசிக்கு உணவளி இறந்தவர்க்கு படைக்கும் முன் . .........
நினைத்தால் கவிதை!
நினைக்காவிட்டால் அது கழுதை!
ஆம் மனம் இன்புற்றால் கவிதை!
மனம் வேதனைபட்டால் அது கழுதை தானே!
காளையவன் கைப்பிடியில்
துவண்டு சரிந்து
தோளில் மாலையாகி
படர்ந்து பறக்கும் தருணம்
பட்டென்று நீர் தெளித்து
போதும் எழுந்திரென்றாள்
முதிர்கன்னியை...
வாழ்ந்து முடித்த தாய்....
கனவு வாழ்க்கை
கானல் நீராய்
கண்ணில் முத்துக்களாய்
கடத்துகின்றாள் காலத்தை
கன்னிமகள்...
தனிநாடு விரும்பும்
ஈழத்தமிழச்சியாய்.....
மெல்லக்கடி
இதழ் உரசு
மேனி தளுவு
செல்லமாய் எட்டி மிதி
உள்ளுக்குள் அரவணை
உயிரைத் தொடு
போதும் ,
மத்தது அனைத்தையும்
நீ பிறந்தபின்பு பார்த்துக்கொள்வோம்,
இப்பொழுது மெல்ல மெல்ல
என் வயிற்றின் மேல்பாகம் தொடு ,
அந்தச்சுகம் தான் இந்த பத்துமாதம் விரும்புகிறது ..
வாயிருந்தும்
வாயில்லா ஜீவனானேன்
நீயிட்ட முதல் முத்தம்!